[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS கர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்

‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ – திரைப்பார்வை

review-of-vantha-rajavathaan-varuven

2013-ல் தெலுகில் வெளியாகி வெற்றியடைந்த ‘அத்தரின்டிக்கி தரேதி’ படத்தை ‘வந்தா ராஜாவதான் வருவேன்’ எனும் பெயரில் தமிழில் ரீமேக் செய்திருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி. ஹீரோவான சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்க, கேத்ரின் தெரஸா, ரம்யாகிருஷ்ணன், யோகி பாபு, பிரபு, நாசர், ரோபோ சங்கர் ஏராளமான நட்சத்திரங்களும் இந்தப் படத்தில் வந்திருக்கிறார்கள். 

Image result for vantha rajavathaan varuven

பெரும் பணக்காரர் நாசரின் மகளான ரம்யாகிருஷ்ணன் தன் மனதுக்குப் பிடித்த பிரபுவை திருமணம் செய்துகொள்ள, அது பிடிக்காத நாசர் அவரது உறவை அறுத்துக் கொள்கிறார். இறுதி காலத்தில், மகள் பாசம் துரத்த தனது பேரனான சிம்புவை அனுப்பி, ரம்யா கிருஷ்ணனை சமாதானம் செய்து அழைத்து வர அனுப்பி வைக்கிறார். அதன்பிறகு, ‘அத்தரின்டிக்கி தரேதி’எனும் தெலுகு மசாலாவில், தனது காமெடி மசாலாவையும் கொஞ்சம் கூடுதலாக தூவி சுந்தர் சி உருவாக்கியிருக்கும் படமே ’வந்தா ராஜாவாதான் வருவேன்’. 

உங்கள் வீட்டு டிரைவர் ரோல்ஸ் ராய்ஸ் காரில் வந்திறங்கினால் அதிர்ச்சி ஏற்படும் தானே? ஆனால் அப்படியான ஒரு டிரைவராகவே ரம்யாகிருஷ்ணன் வீட்டில் சிம்பு இருக்கிறார். டிரைவராக மாறுவதற்கு தன் சூவை மட்டும் கழட்டி வைத்து விட்டு செருப்பை  மாற்றிக் கொள்ளும் சிம்பு, ஒரே ஒரு காட்சியில் மட்டும் டிரைவராகவும், மற்றக் காட்சிகளில் எல்லாம் ரகளை செய்துகொண்டும் இருக்கிறார். சில இடங்களில் தன்னையே கிண்டலும் செய்து கொள்கிறார். 

Image result for வந்தா ராஜாவா தான் வருவேன்

‘ஒரு பக்க கதை’ மூலம் ஹீரோயினாக வந்த மேகா ஆகாசுக்கு இறுதியில் ஹீரோயினாக நடித்தப் படம் திரைக்கு வந்தது. ஆங்காங்கே ஜெனிலியாவை நினைவுப்படுத்தி, க்யூட்டாகவும், க்ளமாராகவும் தோன்றுகிறார். கேத்ரின் தெரஸாவும் தனக்குக் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். ‘வந்தா ராஜாவதான் வருவேன்’ படம் முழுக்க ரோபோ சங்கரும், விடிவி கணேசும் சிம்புவுடன் பயணித்தாலும் யோகி பாபு வந்தவுடன் தான் திரையரங்குகள் அதகளமாகிறது. அந்தளவிற்கு ஒன்லைனர்களால் தெறிக்க விடுகிறார். 

‘அத்தை’ கதாபாத்திரத்தில் ரம்யாகிருஷ்ணன் கதாபாத்திரம் முக்கியமானதாக இருந்தாலும், திரைக்கதையில் அந்தளவிற்கு வலுவாக இல்லை. அதைப் போலவே, நாசர், பிரபு, ராதாரவி போன்றவர்களும் கதையோட்டத்தில் வந்து செல்லும் மனிதர்களாகவே வந்து போகிறார்கள். கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு வண்ணமயமான காட்சிகளை கண்களுக்குள் கடத்த, ஹிப்ஹாப் தமிழாவின் இசை சில பாடல்களில் மட்டும் மனம் கவருகிறது. பின்னணி இசை சலிப்பு. 

Image result for வந்தா ராஜாவா தான் வருவேன்

ஆரம்பத்தில் ஒரு நல்ல கமர்ஷியல் திரைப்படத்தை பார்க்கலாம் என்ற நினைப்போடு அமர்ந்தால், காட்சிகளின் அதீத நம்பகத்தன்மையின்மை ஒருவித அயர்ச்சியைக் கொடுக்கிறது. அதுவும் டிரைவர் சிம்பு வீட்டிற்கு வெளியேயே காஃபி ஷாப் வைத்திருப்பது எல்லாம் ‘டூ மச்’. ஏராளமான கதாபாத்திரங்கள் வந்து செல்வதால், சில காட்சிகளில் சீரியல் ஃபீல். ஜாலியான ஒரு கதையை தமிழ்படுத்துவதற்கு, திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் ‘வந்தா ராஜாவதான் வருவேன்’ என்பதை டைட்டிலில் மட்டுமின்றி நிஜத்திலும் சொல்லி கெத்து காட்டியிருக்கலாம். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close