[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் எம்எல்ஏக்களை கடத்தியதால்தான் பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல் வந்தது - பி.கே.ஹரிபிரசாத்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்

தமிழ் ராக்கர்ஸ்க்கும் விஷாலுக்கும் தொடர்பு - தயாரிப்பாளர் குற்றச்சாட்டு

actor-vishal-is-one-of-the-partner-in-tamil-rockers-says-al-azagappan

தமிழ் ராக்கர்ஸில் நடிகர் விஷாலுக்கு பங்கு இருப்பதாக தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

மறுபடியும் நடிகர் விஷாலை சுற்றி பரபரப்பு தொற்றியுள்ளது.  நடிகர் சங்க பிரச்னையில் அதிகப்படியான ஆதரவை ஈட்டி அச்சங்க தேர்தலில் வெற்றி பெற்றார் விஷால். யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு அதிலும் வெற்றி வாகை சூடினார். 

நடிகர் சங்க கட்டிடம், திருட்டு விசிடி, ஆன்லைன் பைரைசி, சிறு பட்ஜெட் திரைப்படங்களுக்கு தியேட்டர் கிடைக்காமல் போவது உள்ளிட்ட பல பிரச்னைகளை முன்னிருத்தி தயாரிப்பாளர் சங்கத்தேர்தலில் அவர் வெற்றி பெற்றார். அதற்கு ஏற்ப திடீர் ரெய்டு மூலம் திருட்டு விசிடிக்களை பிடிப்பது, புதிய படங்களை ஒளிபரப்பும் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களை கண்டு பிடித்து போலீசில் பிடித்து கொடுப்பது போன்ற அதிரடி நடவடிக்கைகளை நடத்தினார் விஷால். 


ஆனால் டிஜிட்டல் உலகத்தில் திரைத்துறைக்கே பெரிய சவாலாக முன்வந்து நின்றது தமிழ் ராக்கர்ஸ். டார்ச் உள்ளிட்ட ரகசிய இணையதளங்களை பயன்படுத்துதல், ஐபி, டொமைன்களை மாற்றிக்கொண்டே இருத்தல் போன்ற அப்டேட்டான விஷயங்களால் தமிழ் ராக்கர்சை கண்டுபிடிப்பது பெரும் சவாலாக உள்ளது. நடிகர் விஷாலும் எத்தனையோ முயற்சிகள் எடுத்தும் தமிழ் ராக்கர்சை நெருங்க முடியவில்லை. 

இந்நிலையில் தமிழ் ராக்கர்ஸ் ஒரு பிரபலமான தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்தது என்று பரபரப்பான தகவல் பரவியது. அந்த தகவலுக்கு பலர் எதிர்ப்பாகவும், ஆதரவாகவும் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று நடந்த தயாரிப்பாளர் சங்க பிரச்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஏஎல் அழகப்பன், தமிழ் ராக்கர்சில் நடிகர் விஷாலுக்கு பங்கு இருப்பதாக பரபரப்பு தகவலை தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர் ''நடிகர் விஷால் மீது பல குற்றச்சாட்டுகள் வருகின்றன.

தான் தடுப்பதாக கூறும் தமிழ் ராக்கர்சில் அவருடைய பங்கு இருப்பதாகவும் கூறுகின்றனர். விஷால் அணியின் மீது உறுப்பினர்கள் அனைவருமே அதிர்ப்தியில் உள்ளனர். கவுதம் மேனன், பிரகாஷ்ராஜ் ஆகியோரெல்லாம் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதே இல்லை. கர்நாடகாவில் தமிழ் திரைப்படங்களை நேரடியாக டப்பிங் செய்து வெளியிட முடியாது. அப்படி இருக்க கன்னட திரைப்படத்தை தமிழில் நேரடியாக டப்பிங் செய்து விஷால் வெளியிடுகிறார்'' என்று தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close