[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS வரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்
  • BREAKING-NEWS ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

நடிகை சுஜா திருமணம்: சிவாஜி பேரனை மணக்கிறார்!

suja-varunee-to-tie-the-knot-with-shivaji-dev

நடிகை சுஜா வாருணி- சிவாஜி கணேசன் பேரன் சிவாஜி தேவ் திருமணம் நவம்பர் 19-ஆம் தேதி சென்னையில் நடக்கிறது.

தமிழில், பிளஸ் 2, வாத்தியார், நாளை, அம்முவாகிய நான், பழனி, சண்டை, பென்சில், கிடாரி உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் சுஜா வாருணி. இவருக்கும், ‘சிங்ககுட்டி’ படத்தில் ஹீரோவாக நடித்த சிவாஜி தேவுக்கும் காதல் இருந்து வந்தது.

சிவாஜி தேவ்,  சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமாரின் மகன். இவர்கள் திருமணத்துக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, கடந்த வாரம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். 

இந்நிலையில் இவர்கள் திருமணம் அடுத்த மாதம் 19- ஆம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடக்கிறது. 

திருமணம் பற்றி நடிகை சுஜா கூறும்போது, ‘நானும், சிவாஜி தேவும் 12 வருடங்களுக்கு முன்பு சந்தித்தோம். முதலில் நட்பாக பழக ஆரம்பித்த நாங்கள் பின்னர் காதலிக்கத் தொடங்கினோம். எங்கள் காதலுக்கு பெற்றோர்கள் சமீபத்தில்தான் சம்மதம் தெரிவித்தார்கள். அதைத் தொடர்ந்து திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்துக்குப் பின்னும் தொடர்ந்து நடிப்பேன்’ என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close