[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை

நடிகை சோனாலி பிந்த்ரே பற்றி ஷாக் பதிவு: பாஜக எம்.எல்.ஏவால் மீண்டும் சர்ச்சை!

bjp-mla-ram-kadam-tweets-sonali-bendre-has-died

நடிகை சோனாலி பிந்த்ரே பற்றி அதிர்ச்சி பதிவு வெளியிட்ட பாஜக எம்.எல்.ஏ, பின்னர் அந்தப் பதிவை நீக்கிவிட்டார்.

மும்பையை சேர்ந்த பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் கதம். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவின்போது நடந்த உறியடி விழாவில், இளைஞர்கள் விரும்பும் பெண்களை கடத்தி ஒப்படைப்பதாகக் கூறி சர்ச்சையில் சிக்கினார். அந்தச் சூடு ஆறுவதற்குள் அடுத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

நடிகை சோனாலி பிந்த்ரே புற்று நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவர் இறந்துவிட்டதாக நினைத்து, ’புகழ்பெற்ற நடிகை சோனாலி பிந்த்ரே அமெரிக்காவில் காலமானார். அவரது மரணத்திற்கு எனது இரங்க லை தெரிவித்து கொள்கி றேன்’ என்று எம்.எல்.ஏ ராம் கதம் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

உயிரோடு இருக்கும் நடிகைக்கு இரங்கல் செய்தி வெளியிட்ட அவருக்கு கண்டனங்கள் குவிந்தன. இதையடுத்து உடனடியாக தன் பதிவை நீக்கிய அவர், ‘நடிகை சோனாலி பிந்த்ரே குறித்து வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. அவர் ஆரோக்கியமான உடல்நிலையை பெறவும், விரைவில் குணமடையவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என மற்றொரு பதிவை வெளியிட்டுள்ளார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close