[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது
  • BREAKING-NEWS குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு
  • BREAKING-NEWS ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

ஜூன் 17 முதல் ஒளிபரப்பாகும் ‘பிக்பாஸ்2’

kamalhaasan-s-bigg-boss-telecast-on-june-17

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சி வரும் 17 தேதி ஒளிப்பரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. கடந்த ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி, செப்டம்பர் 30 ஆம் தேதி முடிவடைந்தது. ஹிந்தியில் மிகப் பிரபலமான இந்த நிகழ்ச்சி தமிழில் வெளியான போது வெற்றிபெறுமா என சந்தேகம் நிலவியது. இந்நிகழ்ச்சிக்குள் கமல் உள்ளே வந்த போது வேறு பல விமர்சனங்கள் எழுந்தன. சினிமாவில் வாய்ப்பு இல்லாததால்தான் கமல் டிவி பக்கம் வருகிறார் என பலர் வம்பு பேசினர். 

ஆனால் ஓவியா, ஆரவ் காதல் என ‘பிக்பாஸ்’ முதல் பார்ட் தமிழக ரசிகர்கள் இடையே வைரலானது. சினேகன், காயத்ரி ரகுராம், வையாபுரி, பரணி, ஷக்தி, ஜூலி, நமிதா என பங்கேற்ற பலரும் பெரிய நட்சத்திரங்களாக மாறினர். கமல்ஹாசனின் புகழும் உச்சத்தை தொட்டது. நடிகை ஓவியாவிற்கு என்றே ‘ஓவியா ஆர்மி’ ஆரம்பிக்கும் அளவுக்கு போனது இந்தநிகழ்ச்சி. 

இந்நிலையில் ‘பிக் பாஸ் 2’வில் கமல்ஹாசன் இருப்பாரா? என பலரும் சந்தேகம் எழுப்பி வந்தனர். மீண்டும் அவரே தொகுத்து வழங்குவது உறுதியானது. இந்நிலையில் ‘பிக் பாஸ் 2’ வரும் 17 தேதி முதல் ஒளிப்பரப்பாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close