[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்கிம்மர் கருவி மூலம் சென்னை ஏடிஎம்களில் திருட்டு - பல்கேரிய கும்பல் கைது
  • BREAKING-NEWS சிகிச்சைக்குப் பின் ‘மாட்டிறைச்சி சர்ச்சை இளைஞர்’ முகமது பைசான் கைது
  • BREAKING-NEWS ஆங்கிலப் புத்தாண்டில் இந்து கோயில்களை திறக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளிலிருந்து காவிரிக்கு விநாடிக்கு 8,300 கன அடி நீர் திறப்பு

மேஜிக் கலைஞரையே மெர்சலாக்கிய விஜய்

vijay-is-such-a-quick-learner-magician-who-taught-magic-praised

அட்லீ இயக்கத்தில் மெர்சல் படத்தில் நடித்துள்ள விஜய், தன்னுடைய கதாபாத்திரத்திற்காக அதிவிரைவாக மேஜிக் கற்றுக் கொண்டதாக அவருக்கு பயிற்றுவித்த கனடாவைச் சேர்ந்த மேஜிக் கலைஞர் ராமன் சர்மா வியந்து பேசியுள்ளார். 

இது குறித்து அவர் கூறுகையில், ”மெர்சல் படத்தில் பணியாற்றியது என் வாழ்வில் மிகப்பெரிய அனுபவம். விஜய் இந்த படத்தில் மிகவும் அற்புதமாக தெரிவார். மேஜிக் கலைஞர்கள் பல வாரங்களில் கற்றுக் கொள்ளும் மேஜிக்குகளை விஜய் சில மணி நேரங்களிலேயே கற்றுக் கொண்டார். படத்தில் விஜய் செய்யும் மேஜிக்கை பார்த்து நீங்கள் நிச்சயம் திகைத்து போவீர்கள்.

மெசிடோனியா, போலந்து, சென்னை ஆகிய இடங்களில் மேஜிக் தொடர்பான காட்சிகள் படப்பிடிப்பு செய்யப்பட்டது. கனடாவில் விஜய்க்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். சிறியவர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் அவருக்கு ரசிகர்களாக உள்ளனர்” என்றார்.

மெர்சல் படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ள விஜய் மேஜிக் கலைஞராகவும் வருகிறார். கொஞ்சம் மேஜிக் பற்றிய விஷயங்களை அறிந்து கொண்டால் தான் இந்த பாத்திரத்தில் தத்ரூபமாக நடிக்க முடியும் என்பதற்காக அவருக்கு மேஜிக் கற்றுக்கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக வெளிநாட்டில் இருந்து வந்த மேஜிக் நிபுணர்கள் விஜய்க்கு மேஜிக் கற்றுக் கொடுத்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close