[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS திருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்
  • BREAKING-NEWS “மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
  • BREAKING-NEWS நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு

விவசாயிகள் தற்கொலைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் வெற்றிமாறன்

after-visaaranai-vetrimaaran-to-adapt-another-book-into-a-film

விசாரணை படம் மூலம் சர்வதேச கவனம் ஈர்த்த இயக்குனர் வெற்றிமாறன், விவசாயி தற்கொலைகளைக் கதைக் கருவாகக் கொண்டு தனது அடுத்த படத்தை இயக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொல்லாதவன் படம் மூலம் பாலு மகேந்திரா பட்டறையில் இருந்து தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான வெற்றிமாறன், ஆடுகளம் பம மூலம் தேசிய விருதுகளை அள்ளினார். கோவையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சந்திரகுமாரின் ‘லாக் அப்’ என்ற நாவலை அடிப்படையாக் கொண்டு இவர் இயக்கிய விசாரணை படம் சர்வதேச கவனம் பெற்றது.

விசாரணைக்குப் பின்னர் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. விவசாயிகள் தற்கொலைகளை அடிப்படையாகக் கொண்டு கோட்டா நீலிமா என்ற அரசியல் எழுத்தாளர் எழுதிய ‘ஷூஸ் ஆஃப் தி டெட்’ என்ற நாவலைத் தழுவி புதிய படம் எடுக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார். இந்த தகவலை எழுத்தாளர் நீலிமா கோட்டா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும், இந்த படத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘கிராஸ் ரூட் புரடக்ஷன்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரிக்கவும் வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close