[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
  • BREAKING-NEWS போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்கள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS தெலங்கானா: 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது - தெலங்கானா போலீஸ்
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பதை அறிவதில் சிரமம் இருக்கிறது - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

பிரபு பிறந்தநாளுக்கு நேரில் வாழ்த்திய ரஜினி

rajini-wishes-birthday-to-prabhu

இளைய திலகம் பிரபுவின் 60-வது பிறந்தநாளில் அவரது இல்லத்துக்கு நேரில் சென்று சூப்பர்ஸ்டார் ரஜினி வாழ்த்தினார்.

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மகனும், நடிகருமான பிரபு, தனது 60-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி அவரது இல்லத்தில் பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. திரையுலகை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பிரபுவின் இல்லமான அன்னை இல்லத்துக்கு நேரில் சென்று அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். பிரபுவிற்கு தனது பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்த ரஜினிகாந்த், அவரது குடும்பத்தினருடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close