[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

'கடவுள் இருக்கான் குமாரு' படத்தை வெளியிட தடை

hc-stay-order-for-kadavul-irukan-kumaru-movie-release

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள கடவுள் இருக்கான் குமாரு படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மெரினா பிக்சர்ஸ் நிறுவன உரிமையாளர் சிங்காரவேலன் என்பவர் தொடர்ந்த வழக்கில், லிங்கா படத்தினால் ஏற்பட்ட 65 லட்சம் ரூபாய் நஷ்டத்தை தயாரிப்பாளர் டி.சிவா தரவில்லை என தெரிவித்திருந்தார்.

பணத்தை தராதவரை, டி.சிவாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள கடவுள் இருக்கான் குமாரு படத்தை வெளியிட தடை விதிக்‌க வேண்டும் என சிங்காரவேலன் தரப்பில் இன்று வாதிடப்பட்டது. இதை கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ், பணப் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்வரை, கடவுள் இருக்கான் குமாரு படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார்-நிக்கி கல்ராணி-கயல் ஆனந்தி நடித்த கடவுள் இருக்கான் குமாரு திரைப்படம் இந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close