Published : 25,Jul 2017 07:00 AM

யாரும் தொடாத மெர்சலின் புதிய சாதனை

mersal-creates-a-new-record

விஜய்யின் ’மெர்சல்’ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ட்விட்டரில் 50,000 ரீட்விட் செய்யப்பட்டு ட்விட்டர் வரலாற்றிலேயே எந்த ஒரு திரைப்படமும் செய்யாத சாதனையை படைத்துள்ளது.

தெறி படத்தின் வெற்றியை அடுத்து தளபதி விஜய்-இயக்குநர் அட்லீ கூட்டணியில் உருவாகிவரும் மெர்சல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 21-ஆம் தேதி விஜய்யின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது ’மெர்சல்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ட்விட்டர் வரலாற்றிலேயே இதுவரை எந்த ஒரு திரைப்படமும் செய்யாத சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது. ஆம் ட்விட்டரில் 50,000 ரீட்விட் செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு இந்த எந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் 50,000 ரீட்விட்டை தொட்டதில்லை. இதை கொண்டாடும் வகையில் ட்விட்டரில் MersalFL50kRT என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் டிரண்ட் செய்து வருகின்றனர்.

மெர்சல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது முதலே, படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து வரும் நிலையில் படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஏங்கிக்கொண்டிருந்த போது இந்த சாதனை ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கே இவ்வளவு வரவேற்பு என்றால் டீசர், டிரெய்லர் என இன்னும் எத்தனை சாதனைகளை படைக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.  

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்