[X] Close

காவல்துறை மரியாதையுடன் விவேக் உடல் இன்று தகனம் - தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ்நாடு

Tamil-Nadu-government-has-announced-that-Vivek-funeral-will-be-held-with-police-honors-

மறைந்த நடிகர் விவேக்கின் இறுதிச்சடங்கு காவல்துறை மரியாதையுடன் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 


Advertisement

தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக விளங்கிய விவேக், மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரின் உடல் சாலிகிராமத்திலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு நண்பர்கள், திரைத்துறை பிரபலங்கள்,  நடிகர், நடிகைகள்,  பொதுமக்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விவேக்கின் உடல் இன்று மாலை விருகம்பாக்கம் மின் தகன மேடையில் தகனம் செய்யப்படுகிறது என குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் விவேக்கிற்கு அரசு சார்பில் காவல்துறை மரியாதை அளிக்க தேர்தல் ஆணையத்திடம் தமிழக அரசு அனுமதி கோரியிருந்தது.  சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதி அவசியம் ஆகும். இந்த நிலையில் காவல்துறை மரியாதையுடன் நடிகர் விவேக்கின் உடலை தகனம் செய்ய அனுமதி அளித்துள்ளது தேர்தல் ஆணையம். 

'தேசிய அளவிலும் மாநில அளவிலும் பல்வேறு விருதுகளைப் பெற்றவர், தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர் நடிகர் விவேக்' என்று தமிழக அரசு புகழாரம் சூட்டியுள்ளது. விவேக்கின் புகழுக்கு பெருமை சேர்க்க, அவரது கலை, சமூகச் சேவையை கவுரவிக்கும் வகையில் காவல்துறை மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது. 


Advertisement


Advertisement

Advertisement
[X] Close