2025-ஆம் ஆண்டுக்குள் புகையிலை, சிகரெட் பயன்பாடு இல்லாத நாடாக நியூசிலாந்தை உருவாக்க, அந்நாட்டு அரசு செயல் திட்டங்களை அறிவித்துள்ளது.
இந்தத் திட்டங்களின் மூலமாக சட்டப்பூர்வமான புகைபிடிக்கும் வயது படிப்படியாக அதிகரிக்கப்படும். 2004-க்குப் பிறகு பிறந்த எவருக்கும் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்கான தடை வரை நீட்டிக்கப்படலாம். அந்த தலைமுறைக்கு புகைபிடிப்பது சட்டவிரோதமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் புகையிலை பொருட்களில் அனுமதிக்கப்பட்ட நிகோடினின் அளவைக் கணிசமாகக் குறைத்தல், வடிப்பான்களைத் தடை செய்தல், புகையிலைக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயித்தல், புகையிலை மற்றும் சிகரெட்டுகளை விற்கக்கூடிய இடங்களை கட்டுப்படுத்துதல் ஆகிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நியூசிலாந்தின் இணை சுகாதார அமைச்சர் டாக்டர் ஆயிஷா வெரால் இந்த மாற்றங்களை அறிவித்தபின்பு, "ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4,500 நியூசிலாந்து மக்கள் புகையிலையால் இறக்கின்றனர், 2025 ஆம் ஆண்டுக்குள் புகையிலை இல்லாத நாடாக நியூசிலாந்தை மாற்ற விரைவான செயல்திட்டத்தை நாம் கடைபிடிக்க வேண்டும். இதற்கு நமக்கு ஒரு புதிய அணுகுமுறை தேவை” எனத் தெரிவித்தார்.
நியூசிலாந்து மக்களிடையே புகைபிடிப்பவர்கள் எண்ணிக்கை மிக அதிகம். இந்நாட்டில் புற்றுநோயால் இறக்கும் நால்வரில் ஒருவர் புகையிலையால் உயிரிழக்கிறார். எனவே அதனை கட்டுப்படுத்தும் திட்டங்களை பல பொது சுகாதார அமைப்புகள் வரவேற்றுள்ளன. ஆனால் இந்தத் திட்டங்கள் மூலமாக சிறிய கடை உரிமையாளர்களுக்கு பெரும் பாதிப்பை உருவாக்கும் எனவும், இந்த தடைமூலமாக கள்ளச்சந்தையில் புகையிலை விற்பனையாகும் எனவும், கடத்தலுக்கும் வழிவகுக்கும் என்றும் சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்