[X] Close

“ஆஸ்திரேலிய தொடரின் போதே கோலி என்னிடம் கூறியிருந்தார்” - மேக்ஸ்வெல்

ஐபிஎல் திருவிழா

We-would-love-to-have-you-in-RCB-Team-IPL-2021-said-Virat-Kohli-to-Maxwell-during-the-India-tour-of-Australia-and-Maxwell-Reveals-that-now-who-plays-for-RCB

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆல் ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல் நடப்பு ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். அவரை அந்த அணி 14.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது. இந்நிலையில், தன்னை பெங்களூரு அணிக்காக விளையாட வைக்கே வேண்டும் என கேப்டன் கோலி ஏலம் எடுபபதற்கு முன்னதாகவே விரும்பியதாக தெரிவித்துள்ளார் மேக்ஸ்வெல். மேலும் இதனை தன்னிடம் கோலியே இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது சொல்லியிருந்ததாக தெரிவித்துள்ளார். 


Advertisement

ஆர்சிபி அணியின் ட்விட்டர் பதிவில் இது ஷேரும் ஆகியுள்ளது. அதில் மேக்ஸ்வெல் சொல்லியிருப்பது. “நாங்கள் இருவரும் எப்போதாவது டெக்ஸ்ட் மெசேஜ் செய்து கொள்வதுண்டு. அப்படி ஒரு தருணத்தில் இதனை பகிர்ந்திருந்தார் கோலி. அது இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கு பின்னர் நடந்த உரையாடல். அதில் ஆர்சிபி அணிக்காக விளையாடுவது குறித்து என்னிடம் பேசி இருந்தார். ‘நாங்கள் உங்களை அணியில் சேர்க்க விரும்புகிறோம். இருந்தாலும் ஏலம் இருக்கிறது. பார்ப்போம்’ என்றார். மேலும் அணியின் நான் இருந்தால் அற்புதமாக இருக்கும் எனவும் அப்போது சொல்லி இருந்தார். அவரது விருப்படி நல்ல படியாக இப்போது நான் ஆர்சிபி அணிக்காக விளையாடுவது எனக்கும் மகிழ்ச்சி” என சொல்லியுள்ளார். 

மேக்ஸ்வெல்லிடம் ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போதே ஆர்சிபி கேப்பையும் கொடுத்து அழகு பார்த்துள்ளார் சக வீரரான ஆடம் சாம்பா. 

முதல் போட்டியில் மும்பை அணிக்கு எதிராக தனது ஆட்டத்தின் மூலம் முத்திரை பதித்திருந்தார் மேக்ஸ்வெல். அந்த அணி ஐதராபாத் அணியுடன் இன்று விளையாடுகிறது. 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close