Published : 03,Apr 2021 07:11 AM
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: நாளையுடன் பரப்புரை நிறைவு; அனல்பறக்கும் இறுதிக்கட்ட பரப்புரை!

சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை நாளையுடன் முடிவடையும் நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே பிரதான கட்சிகளான அதிமுக, திமுக பரப்புரையைத் தொடங்கிய நிலையில், தேர்தல் களம் சூடிபிடித்துவிட்டது.
தமிழகத்தில் திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, அமமுக, தேமுதிக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என 5 முனைப்போட்டி நிலவுகிறது. நாளை இரவு 7 மணியுடன் பரப்புரை முடிவடையும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.