Published : 29,Mar 2021 08:21 PM

எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள நயன்தாராவின் ‘நிழல்’ பட ட்ரைலர்!

Nayanthara-s-Nizhal--Trailer-Released

நயன்தாரா மலையாளத்தில் நடித்துள்ள ‘நிழல்’ படத்தின் ட்ரைலர் வெளியாகி இருக்கிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நயன்தாரா மலையாளத்தில் நிவின் பாலி ஜோடியாக நடித்த ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’ படம் வெற்றி பெற்றதோடு, ’குடுக்கு பட்டிய குப்பாயம்’ பாடல் வைரல் ஹிட் ஆனது.

image

அதனால், மீண்டும் பிரபல படத்தொகுப்பாளர் அப்பு என். பட்டாத்திரி இயக்கத்தில் ’நிழல்’ படத்தில் நடித்து வருகிறார். த்ரில்லர் படமான இதில் நயன்தாராவுக்கு ஜோடியாக குஞ்சாக்கோ போபன் நடிக்கிறார்.

image

ஏற்கனவெ, குஞ்சாக்கோ போபனுடன் ’ட்வென்டி 20’ படத்தில் சிறிய வேடத்தில் நயன்தாரா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளனர்.

image

’நிழல்’ படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள நிலையில், தற்போது ட்ரைலர் வெளியாகி இருக்கிறது. ட்ரைலரின் பின்னணி இசையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது என்று ரசிகர்கள் கருத்திட்டு வருகிறார்கள்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்