Published : 25,Mar 2021 12:04 PM
திருவண்ணாமலை திமுக வேட்பாளர் எ.வ.வேலு வீட்டில் வருமான வரித்துறை சோதனை

திருவண்ணாமலை திமுக வேட்பாளர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் வரும் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே பல்வேறு அரசியல் கட்சியினருக்கு சொந்தமான இடங்களிலும் வேட்பாளர்கள் வீட்டிலும் வருமானவரித்துறை சார்பில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் எ.வ.வேலு வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். எ.வ.வேலுவின் வீடு, கல்லூரி, அறக்கட்டளை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வாக்காளர்களுக்கு விநியோகிக்க பணம் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலின் பேரில் சோதனை நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில வர்த்தகர் அணி துணைத் தலைவர் எஸ்.தணிகைவேல் போட்டியிடுகிறார்.