[X] Close

மெஷின் பந்து வீச, தோனி விளாச... இன்று சிக்சர் திருவிழா!

TNPL-Second-edition-starts-today

தமிழ்நாடு பிரிமீயர் லீக் எனப்படும் டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் சென்னையில் இன்று தொடங்குகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சியில், நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் சிக்சர் போட்டி நடத்தப்படுகிறது. எந்திரம் மூலம் பந்துகள் வீசப்படும். ஒவ்வொருவருக்கும் 6 பந்துகள். அதில் யார் அதிக சிக்சர் அடிக்கிறார்களோ அவர்கள் வெற்றியாளர். ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் சம எண்ணிக்கையில் சிக்சர் அடித்திருந்தால், யார் அதிக தூரம் அடித்திருக்கிறார்கள் என்பது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.


Advertisement

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, மொகித் ‌ஷர்மா, பத்ரிநாத், பவான் நெகி, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன், தமிழ்நாடு பேட்ஸ்மேன் அனிருதா ஸ்ரீகாந்த் ஆகியோர் பங்கேற்கின்றனர். சிக்சர் போட்டி மாலை 6 மணிக்கு தொடங்கி 7 மணிக்குள் நிறைவடையும். அதைத் தொடர்ந்து முதலாவது ஆட்டம் இரவு 7.15 மணிக்கு தொடங்கும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கும் இந்த நிகழ்ச்சியில் எல்.பாலாஜி, எம்.விஜய், தமிழக ஆல் ரவுண்டர் கணபதி ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். 
‘இந்த போட்டியின் தொடக்க விழாவை மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஸ்பான்சர் செய்கிறது. அதனால் தோனி உள்ளிட்ட வீரர்கள் சிஎஸ்கே அணியின் ஜெர்சியை பயன்படுத்த மாட்டார்கள்’ என்று சிஎஸ்கே அணி தெரிவித்துள்ளது. 


Advertisement

Advertisement
[X] Close