மும்பையில் ஆட்டோவில் ஏறும் பெண்ணிடம் முகக்கவசம் அணியுமாறு வலியுறுத்திய மாநகராட்சி ஊழியரை, அப்பெண் கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.
இந்த சம்பவத்தை பதிவு செய்த மொபைல் வீடியோவில், ஒரு பெண் ஆட்டோரிக்ஷாவுக்குள் ஏற முயற்சி செய்கிறார், அப்போது நீல நிற சீருடை அணிந்த மாநகராட்சி ஊழியர், அவரிடம் முகக்கவசம் அணியுமாறு சொல்கிறார். உடனே ஆட்டோவில் ஏறிய அந்த பெண் திடீரென்று தொழிலாளியை அறைகிறார். பின்னர், மாநகராட்சி சீருடை அணிந்த அந்த பெண்ணை தொடர்ந்து குத்தி உதைக்கும் சம்பவம் பதிவாகியிருக்கிறது.
இந்த சம்பவம் மும்பையின் கண்டிவாலி சாலையில் நடந்துள்ளது. "என்னைத் தடுக்க உங்களுக்கு எவ்வளவு தைரியம்? என்னைத் தொட எவ்வளவு தைரியம்?" என்று ஆட்டோவில் வந்த பெண் கூச்சலிடுவதுக் கேட்கிறது. "அவரை விடாதீர்கள்" என்று தாக்குதலால் அதிர்ச்சியடைந்த பி.எம்.சி ஊழியர் கூடியிருந்த சிலரிடம் கூறுகிறார்.
தொற்றுநோய் பரவல் காரணமாக மும்பையில் முகக்கவசம் அணியாததற்காக 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் வியாழக்கிழமை இரவு வரை 24 மணி நேர காலகட்டத்தில் 25,833 புதிய கோவிட் -19 வழக்குகள் பதிவாகியுள்ளன. முகக்கவசம் போன்ற பாதுகாப்பு விதிகளை பின்பற்றவில்லை என்றால், மற்றொரு கடுமையான பொதுமுடக்கம் விதிக்கப்படலாம் என்பது குறித்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரே எச்சரித்திருக்கிறார்.
Loading More post
பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்வதா? அண்ணாமலைக்கு வலுக்கும் கண்டனம்
திருப்பதி கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 4 கிமீ தூரம் நீளும் வரிசை
இன்று திறக்கப்படுகிறது முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் முழு உருவச் சிலை
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!