[X] Close

அதிரடி ஹர்மன்ப்ரீத்துக்கு ஆஸி. வீராங்கனை அளித்த சிறப்பு பரிசு 

Aussie-to-Action-Harman-Special-gift-from-the-hero

மகளிர் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் 171 ரன்கள் குவித்த இந்திய வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கவுருக்கு, ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் பிளாக்வெல், தனது ஜெர்ஸியை பரிசளித்தார். 

ஆறுமுறை உலகச் சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கவுர் 115 பந்துகளில் 171 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அந்த போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர், 20 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் விளாசினார். 

அவரது அதிரடியின் உதவியால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 40.1 ஓவர்களில் 245 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கடைசி விக்கெட்டுக்கு அதிரடி காட்டிய ஆஸ்திரேலிய துணைக் கேப்டன் அலெக்ஸ் பிளாக்வெல், 56 பந்துகளில் 90 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். போட்டிக்குப் பின்னர் ஹர்மன்ப்ரீத் கவுரின் சிறப்பான ஆட்டத்தைப் பாராட்டிய பிளாக்வெல், தனது ஜெர்ஸியை பரிசாக அளித்தார். இதுதொடர்பான புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஹர்மன்ப்ரீத் கவுர், பிளாக்வெல்லுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் மகளிர் பிக்பேஷ் லீக் தொடரில் பிளாக்வெல் இடம்பெற்றிருக்கும் சிட்னி தண்டர் அணியில் ஹர்மன்ப்ரீத் விளையாடி வருகிறார்.      


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close