[X] Close

ஸ்டன்ட் சில்வா இயக்கத்தில் நாயகியாக சாய் பல்லவியின் சகோதரி அறிமுகமாக வாய்ப்பு!

சினிமா

Sai-Pallavi-sister--Pooja-Kannan--is-likely-to-make-her-debut-in-Tamil-film

நடிகர் சாய் பல்லவியின் சகோதரி பூஜா கண்ணன், ஸ்டன்ட் சில்வா இயக்கும் தமிழ்ப் படத்தில் அறிமுகமாகவுள்ளார். அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படாத நிலையில், இப்படத்தில் சமுத்திரகனியும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தன்னுடைய அக்காவைப் போலவே பூஜாவும் நடிகையாவார் எனப் பேசப்பட்டது. அதற்கேற்றாற்போல் 2017-இல் வெளியான காரா என்ற குறும்படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படத்தை அஜித் அசோக் என்பவர் இயக்கி இருந்தார்.

ஆனால், பூஜா நடிகையாக வராமல் இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் உதவியாளராக பணியாற்றினார். சாய் பல்லவியை போலவே பூஜாவுக்கு இணையத்தில் குறிப்பிடத்தக்க ரசிகர்கள் உண்டு. இதனிடையே, தமிழில் முதல் முறையாக அறிமுகமாக இருக்கிறார். இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. அறிவிப்பு வெளியானதால்தான் படத்தில் அவருடன் யார் யார் பணியாற்றுகிறார்கள் என்கிற விவரம் வெளிவரும்.

image


Advertisement

எனினும், இயக்குனர் ஏ.எல்.விஜய் வசனம் எழுதுவார் என்று கூறப்படுகிறது. இயக்குனர் ஏ.எல்.விஜய், பூஜாவின் சகோதரி, நடிகர் சாய் பல்லவியுடன் 'கரு' படத்தில் பணியாற்றியுள்ளார். படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றிபெறவில்லை என்றாலும், 'கரு'வில் நடிகர் சாய் பல்லவியின் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது. இந்தப் படத்தில் சாய் பல்லவி கர்ப்பிணிப் பெண்ணாக நடித்தார். தமிழில், சாய் பல்லவி கடைசியாக நெட்ஃபிக்ஸில் வெளியான 'பாவக்கதைகள்' ஆந்தாலஜி படத்தில் நடித்திருந்தார்.

ஸ்டன்ட் இயக்குனர் சில்வா பல படங்களில் பணியாற்றியுள்ளார். 2004-ஆம் ஆண்டில் செல்வராகவனின் '7ஜி ரெயின்போ காலனி'யில் ஒரு நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும், பல மொழிகளில் பல படங்களில் சண்டைக் காட்சிகளை அமைப்பதில் பெயர் பெற்றவர். எல்லா முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியிருக்கும் ஸ்டன்ட் சில்வா, 2012-ல் மாதவன் மற்றும் ஆர்யா இணைந்து நடித்த ’வேட்டை' தமிழ்ப் படத்துக்காக திரைப்பட விருதை வென்றுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close