இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ள புதிய கவாஸ்கி நிஞ்சா ZX -10R பைக்கின் அம்சங்கள் குறித்து இந்தக்கட்டுரையில் பார்க்கலாம்.
புதிய கவாஸ்கி நிஞ்சா ZX -10R பைக் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த புதிய வகை பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை 15 லட்சமாக உள்ளது. இந்த புதிய வகை கவாஸ்கி நிஞ்சா ZX -10R பைக்கின் வடிவமைப்பு ரேசில் ஈடுபடும் விளையாட்டு வீரர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏரோடைனமிக் மற்றும் 3டி ரிவர் மார்க் பேட்ஜ் வசதிகளை உள்ளடக்கிய நிஞ்சா ZX -10R பைக்கில் அமைந்திருக்கும் ஹெட்லைட்ஸ்( எல்.இ.டி வசதியுடன்) கண்ணைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமன்றி ஒருங்கிணைந்த வின்ட் ஷீல்டு உயரமான வின்ட் ஷீல்டு, எல்.இ.டி வசதி கொண்ட கண்ணாடிகள், டேங்க் பேடுடன் உள்ளடக்கிய மஸ்குலார் பெட்ரோல் டேங்க் ஆகியவை இடம்பெற்றுள்ளன. அதிகப்படியான நெகிழ்வு தன்மை கொண்ட இந்த பைக்கின் ஹேண்டில் பார் சற்று முன்னோக்கி நகர்த்தி வைக்கப்பட்டுள்ளது. ரேசில் ஈடுபடும் வீரர்கள் அதிகப்படியாக சரிய ஏதுவாக கால்பிடிகள் 5 எம்.எம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த புதிய வகை நிஞ்சா பைக் லைம் கீரின் மற்றும் கருப்பு நிறம் ஆகிய இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்த புதியவகை ZX-10R பைக்கை ப்ளூ டூத் வசதி மூலம் மொபைலில் பொருத்தி கையாள முடியும்.
பி6 ( 998cc)4 சிலிண்டர் என்ஜினை கொண்ட இந்த பைக்கில் கார்னர் மேனேஜ்மென்ட் சிஸ்டம், சிக்ஸ் ஆக்ஸிஸ் IMU, என்ஜின் ப்ரேக் கன்ரோல் உள்ளிட்ட பல வசதிகள் இடம்பெற்றுள்ளன.43 எம்.எம் அளவிலான சஸ்பென்ஷன் வசதியை கொண்ட இந்த பைக்கில், ப்ரேக் சிஸ்டமும் வரவேற்கத்தக்கதாக அமைந்துள்ளது.
Loading More post
”அரசுப் பள்ளிகளில் எப்போது தொடங்குகிறது மாணவர் சேர்க்கை?”- பள்ளிக்கல்வித்துறை பதில்
கல்வித் தொலைக்காட்சியில் சிஇஓ பதவி: தகுதியும் ஆர்வமும் இருப்போர் விண்ணப்பிக்கலாம்!
'கெத்துக்காக' ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்... அதிர்ச்சி வீடியோ!
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?