[X] Close

முகேஷ் அம்பானிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்: விசாரணையில் நடப்பது என்ன?

இந்தியா

Security-threat-to-Ambanis--NIA-investigations

மார்ச் 16-ஆம் தேதி மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே வழக்கத்திற்கு மாறாக பிஸியாக இருந்தார். பிப்ரவரி 25-ஆம் தேதி தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இல்லமான ஆன்டிலியாவுக்கு வெளியே வெடிபொருள்களைக் கொண்ட வாகனம் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக மலபார் மலையில் உள்ள அவரது இல்லத்தில் தனது அரசின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர் சந்திப்புகளை நடத்தினார்.


Advertisement

மார்ச் 13-ம் தேதி மும்பை குற்றப்பிரிவின் உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் சச்சின் வாஸை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்த பிறகு, இந்த வழக்கு சூடுபிடித்துள்ளது. மார்ச் 15-ஆம் தேதி இரவு மும்பை காவல் தலைமையகத்தில் உள்ள குற்ற புலனாய்வு பிரிவு (சிஐயு) அலுவலகங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனை நேற்று (திங்கள்கிழமை) அதிகாலை 4 மணிக்குதான் முடிந்தது என சொல்லப்படுகிறது.

இந்த சோதனையின்போது வழக்கு தொடர்பான ஆவணங்கள், மடிக்கணினி, ஐ-பாட், செல்போன்கள் உள்ளிட்ட மின்னணு சாதனைங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக என்.ஐ.ஏ. அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே இனோவா கார் ஒன்றை பறிமுதல் செய்து இருந்த நிலையில், சோதனையில் அதிகாரிகள் மெர்சிடஸ் பென்ஸ் கார் ஒன்றையும் பறிமுதல் செய்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. காரின் உரிமையாளர் யார் என்று தேடப்பட்டு வருகிறார். இந்த கார் முகேஷ் அம்பானி வீட்டின் முன்பு வெடிப்பொருள்களுடன் நிறுத்தப்பட்ட ஸ்கார்பியோ காரை பின்தொடா்ந்து வந்து, பின்னர் அதில் இருந்த டிரைவரை ஏற்றி சென்ற கார் என கூறப்படுகிறது.


Advertisement

இந்த கார் கண்டுபிடிக்கப்பட்டது, முகேஷ் அம்பானி பாதுகாப்பு அச்சுறுத்தல் வழக்கு தொடர்பான என்ஐஏ விசாரணைக்கு இது மிகப்பெரிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.

image

முன்னதாக, சச்சின் வாஸின் குடியிருக்கும் தானேவில் உள்ள சாகெட் காம்ப்ளெக்ஸில் நிறுவப்பட்ட சி.சி.டி.வி-யிலிருந்து பதிவான காட்சிகள் காணாமல் போயுள்ளன. முகேஷ் அம்பானியின் வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ள ஜெலட்டின் குச்சிகளைக் கொண்ட ஸ்கார்பியோ கார், அவரது வீட்டிற்கு அருகே கண்டுபிடிக்கப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் வாஸின் வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சி.சி.டி.வி காட்சிகளால் தன்னிடம் கார் வைத்திருப்பதை உறுதிப்படுத்த முடியும் என்பதால், அதனை வாஸ் அழித்திருக்க முடியும் என்று என்ஐஏ சந்தேக்கிறது.


Advertisement

மேலும், முகேஷ் அம்பானி வீட்டருகே ஸ்கார்பியோ கார் இரவில் நின்றபோது, அதே தெருவில் சாலையில் ஒருவர் சந்தேகத்துக்கு இடமான வகையில் நடந்துகொண்டும் கொரோனா பாதுகாப்பு உடையான பிபிஇ கிட் உடையை அணிந்துகொண்டு சுற்றித்திரிந்துகொண்டு இருந்துள்ளார். இது போலீஸ் அதிகாரி சச்சின் வாஸ் தானா என்ற விசாரணையிலும் என்ஐஏ அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

மற்றொரு அதிகாரிக்கு தொடர்பு?

இந்த வழக்கு தொடர்பாக, மும்பை காவல்துறையின் 7 உறுப்பினர்களின் வாக்குமூலங்களையும் என்.ஐ.ஏ பதிவு செய்துள்ளது. அவர்களில் ஏ.சி.பி நிதின் அலக்னூர், போலீஸ் இன்ஸ்பெக்டர் மிலிந்த் கதே, ஏபிஐ ரியாசுதீன் காசி, ஏபிஐ பிரகாஷ் ஹோவல் மற்றும் மூன்று கான்ஸ்டபிள்கள் உள்ளனர். இவர்களின் ரியாசுதீன் காசி சந்தேக வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.

image

அதற்கு காரணத்தை விளக்கியுள்ள என்.ஐ.ஏ அதிகாரி ஒருவர், ``முகேஷ் அம்பானி வீட்டில் கார் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்கு பிறகு ரியாசுதீன் காசி, சச்சின் வாஸ் வசித்து வரும் தானே சாகித் பகுதியில் உள்ள கட்டிடத்தின் சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை வாங்கி இருக்கிறார். இப்படி வாங்கியதை வழக்கு தொடர்பாக சேகரிக்கப்பட்ட சாட்சியங்கள் பட்டியலில் அது இல்லை. இதனால் ஆதாரங்களை அழிப்பதற்காக இருவரும் சேர்ந்து முயற்சித்து இருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.

இதேபோல ஜெலட்டின் குச்சிகள் நிரப்பிய ஸ்கார்பியோ காரில் இருந்த போலி நம்பர் பிளேட்களையும் ரியாசுதீன் காசி வாங்கியதாக அறிய முடிகிறது. எனினும் தடயவியல் ஆய்வுக்கு பிறகுதான் இவை அனைத்தும் உறுதி செய்யப்படும்" என்று கூறியிருக்கிறார்.

உள்துறை அமைச்சரை தவிர்க்கும் உத்தவ்!

முன்னதாக, முதல்வர் உத்தவ் தாக்கரே தனது கூட்டணி அரசின் ஓர் அங்கமான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்.சி.பி) தலைவர் ஷரத் பவருடன் மார்ச் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் சிங் இந்த வழக்கைக் கையாள்வது தொடர்பாக இரண்டு சுற்று விவாதங்களை நடத்தினார். மும்பை காவல்துறை, உள்துறை துறையின் கீழ் இயங்குகிறது. தற்போது உள்துறை அமைச்சராக இருப்பார் என்.சி.பி கட்சியைச் சேர்ந்தவர். இந்த நிலையில்தான் பவருடனான சந்திப்பில் நிலைமையை சரியான முறையில் கையாளாததற்காக தாக்கரே உள்துறை அமைச்சர் மீது தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார் என்று கூறப்படுகிறது.

மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணை குறித்த விளக்கத்திற்காக மார்ச் 15-ம் தேதி முதல்வர் போலீஸ் கமிஷனர்களான மிலிந்த் பரம்பே (குற்றம்) மற்றும் விஸ்வாஸ் நங்ரே-பாட்டீல் (சட்டம் ஒழுங்கு) ஆகியோரை முதல்வர் தனது இல்லத்திற்கு வரவழைத்து ஆலோசித்தார். அந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சரை உத்தவ் தாக்கரே அழைக்கவில்லை. அவரை தொடர்புகொள்வதை வேண்டுமென்றே தவிர்த்து வருகிறார். இதற்கிடையே, கூட்டத்தில் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் மாற்றப்படுவது குறித்து ஆலோசிக்கபட்டு, அவர் நீக்கத்துக்கான அவிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

உத்தவ் தாக்கரேவை சந்தித்த பின்னர் கூட்டத்தில் கலந்துகொண்ட அஜித் பவார் செய்தியாளர்களிடம், "விசாரணையில் குற்றவாளி எனக் கருதப்படுபவர் தண்டிக்கப்படுவார், ஆனால் அவர்களுக்கு எதிராக ஆதாரங்கள் நிறுவப்படுவதற்கு முன்பு யாரும் தண்டிக்கப்பட மாட்டார்கள்" என்றார்.


Advertisement

Advertisement
[X] Close