தனுஷின் ‘அசுரன்’ படம் ஜப்பானில் நடக்கும் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியிருக்கிறது. இதனால், தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2019 ஆண்டு வெளியான ’அசுரன்’ வசூல் சாதனை செய்ததோடு, தனுஷின் சிறந்த நடிப்பிற்காக பாராட்டுகளையும் குவித்தது. தனுஷ், மஞ்சுவாரியர், கென் கருணாஸ், டீஜே அருணாச்சலம், பசுபதி உள்ளிடோர் நடிப்பில் போட்டிப்போட்டுக்கொண்டு நடித்தார்கள். எழுத்தாளர் பூமணியின் ’வெக்கை’ நாவல் கதையை திரையில் காட்சிகளாக ரசிக்க வைத்தார் வெற்றி மாறன். தனுஷ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் தனுஷின் நடிப்பை பார்த்துவிட்டு ‘நடிப்பு அசுரன்’ என்றே புகழத் தொடங்கினார்கள்.
’சிவசாமி’ என்ற கேரக்டரில் தனுஷ் வாழ்ந்தார் என்றே பலரும் பாராட்டினர். ஏற்கெனவே ஊடகங்களின் பல்வேறு விருதுகள், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வான படம் போன்ற பல்வேறு சிறப்புகளை ’அசுரன்’ பெற்றிருக்கிறது. தெலுங்கிலும் நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் ’நரப்பா’ என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. இவ்வளவு பாராட்டுகளை குவித்ததால் தனுஷ் தனது ட்விட்டரில் பயோவை “ASURAN/Actor” என்றே பெருமையுடன் மாற்றினார்.
இந்நிலையில், ஜப்பான் நாட்டில் ஒசாகா நகரில் வரும் 27,28 தேதிகளில் நடக்கும் தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் அசுரன் திரையிட தேர்வாகியுள்ளது. அதோடு, சிறந்த தமிழ் படத்திற்கான போட்டியிலும் நாமினேட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!