
நகைச்சுவை நடிகர் செந்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். சென்னையிலுள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் முன்னிலையில், செந்தில் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 1988ம் ஆண்டு முதல் அதிமுகவில் இருந்ததாகவும், தற்போது பாஜகவில் இணைந்துள்ளதாகக் கூறினார். வருகிற சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிற்காக பரப்புரை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்தார்.