[X] Close

மாடுகள் இறக்குமதியை நிறுத்திய ரஷ்யா!

Russia-has-stopped-import-of-cows

கொலம்பியா நாட்டில் மாடுகளுக்கு தொற்றுநோய் பரவி வருவதால் அங்கிருந்து மாட்டுக்கறி இறக்குமதி செய்வதை ரஷ்யா நிறுத்தியுள்ளது.

கொலம்பியா நாட்டில் மாடுகளுக்கு புதுவிதமான தொற்றுநோய் பரவி வருகிறது. மாடுகளின் வாய் மற்றும் காலில் ஏற்படும் இந்த நோயினால் மாடுகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. மேலும் ஒருசில இடங்களில் மாடுகள் இறக்கவும் செய்கின்றன. இதைத் தடுக்க தீவிர நடவடிக்கையை மேற்கொண்டுள்ள கொலம்பிய அரசு, இதனால் மனிதர்களுக்கு பாதிப்பில்லை என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தொற்றுநோய் பரவுவதைத் தொடர்ந்து ரஷ்யா மற்றும் குராகாவோ ஆகிய நாடுகள் கொலாம்பியாவிடம் இருந்து மாட்டுக்கறியை இறக்குமதி செய்வதை நிறுத்தியுள்ளது. அதோபோல் பால் மற்றும் அது சார்ந்த பொருட்களை இறக்குமதி செய்வதை மெக்சிகோவும் நிறுத்தியுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close