[X] Close

உலகின் மிக மெதுவாக நகரும் காட்சிகளுடன் 8 மணி நேரம் ஓடும் திரைப்படம்

8-hours-running-movie-with-the-slowest-moving-scenes-in-the-world

விறுவிறுபான கதையுடன், வேகமெடுக்கும் திரைக்கதையைக் கொண்ட படங்களையே ரசிகர்கள் அதிகம் விரும்புகின்றனர். இந்நிலையில், உலகிலேயே மிக மெதுவாக நகரும் காட்சிகளைக் கொண்ட நீண்ட நேர திரைப்படம் ஒன்று விரைவில் வெளியாகவுள்ளது.


Advertisement

வெறும் ஆட்டு மந்தைகளை மட்டும் காட்சிப்படுத்தியுள்ள அந்த படத்தின் பெயர் பா பா லேண்ட். இங்கிலாந்து வயல் வெளியில் இருக்கும் அந்த ஆடுகள், புற்களை மேய்வது, அசைபோடுவது, தூங்குவது மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வேறெந்த காட்சிகளும் படத்தில் கிடையாது. ஆனால், 8 மணி நேரம் ஓடக்கூடிய படம் இது. மக்களை இது எந்தவிதத்தில் மகிழ்விக்காது என்று படத்தை தயாரித்த காம் நிறுவனமே தெரிவித்துள்ளது. இருப்பினும், இயந்திரமான இந்த உலகில் பணத்திற்காக தூக்கிமில்லாமல் உழைக்கும் மக்கள் இதனைப் பார்த்து, எதைப் பற்றியும் நினைக்காமல் சிறிது நேரம் மன நிம்மதி பெற வேண்டும் என்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close