சென்னையில் தன்னாட்சி அந்தஸ்துடன் இயங்கி வரும் செம்மொழி ஆய்வு மையத்தைத் திருவாரூருக்கு மாற்றக் கூடாது என மாநிலங்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் டி.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
மாநிலங்களவையில் பேசிய அவர், "சென்னையில் தன்னாட்சி அந்தஸ்துடன் இயங்கி வரும் செம்மொழி ஆய்வு மையத்தை திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்துக்கு மாற்ற முயற்சிகள் நடந்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஒருவேளை மத்திய அரசு இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டால், அதை தமிழறிஞர்களும், தமிழர்களும் நிச்சயம் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இதுதொடர்பாக மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்" என்றார்.
இதற்கு பதிலளித்து பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் "திருவாரூர் பல்கலைக்கழகத்துக்கு செம்மொழி ஆய்வு மையத்தை மாற்றுவது குறித்து மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை" என்றார். அனைத்து இந்திய மொழிகளுக்கும் மத்திய அரசு உரிய மரியாதை அளித்து வருகிறது என்றும் ஜவடேகர் தெரிவி்த்தார்.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்