[X] Close

சாலையில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்!

helicopter-Landed-on-the-road

ஒடிசா மாநிலம் கோரபுட்டில் மோசமான வானிலை காரணமாக ஹெலிக்காப்டர் ஒன்று அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒடிசா மாநிலத்தில் பவன் ஹான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஹெலிக்காப்டர் ஒன்று வானில் பறந்துக்கொண்டிருந்தது. அப்போது திடீரென மோசமான வானிலை காரணமாக அந்த ஹெலிக்காப்டர் கோரபுட் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற சாலையில் தரையிறக்கப்பட்டது. அரை மணி நேரத்திற்கு மேலாக சாலையிலேயே நிறுத்தி வைக்கப்படிருந்த ஹெலிகாப்டரால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நடுசாலையில் ஹெலிகாப்டர் நின்றிருந்ததை கண்ட மக்கள் அங்கு கூட ஆரம்பித்ததை தொடர்ந்து வேறுவழியில்லாமல் ஹெலிகாப்டர் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. கோரபுட்டில் உள்ள பாதுகாப்பு படை வீரர்களை அங்கிருந்து விசாகப்பட்டினத்திற்கு கொண்டு செல்வதற்காக அந்த ஹெலிகாப்டர் சென்றது. ஒடிசா மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கடுமையான மழை பெய்து வருகிறது. குறிப்பாக தெற்கு ஒடிசாவில் கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் நேற்று எச்சரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close