சென்னையில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 329 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று 2ஆவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா படுதோல்வியடைந்த நிலையில் மிகவும் எதிர்பார்ப்புடன் 2ஆவது போட்டி நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்ந்தெடுத்தார். இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் டக் அவுட்டானார்.
புஜாரா 21 ரன்கள், கோலி டக் ஆவுட்டான நிலையில். ஆனால் ரோகித் சர்மா 161 ரன்களும், ரஹானே 67 ரன்களும் விளாசினர். இதனையடுத்து நேற்றைய நாள் ஆட்ட நேர இறுதியில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது. இதில் ரிஷப் பன்ட் மட்டுமே சிறப்பாக விளையாடி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 58 ரன்களை எடுத்தார். இன்று காலை மற்ற பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்தியா 329 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதில் இங்கிலாந்து அணியின் மொயின் அலி 4 விக்கெட்டும், ஒல்லி ஸ்டோன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து இப்போது இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வருகிறது.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!