[X] Close

‌அப்துல் கலாம் மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

PM-Modi-to-inaugurate-APJ-Abdul-Kalam-memorial


ராமநாதபுரம் மாவட்டம் பேக்கரும்பில் முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் நினைவாக கட்டப்படும் மணி‌மண்டபத்தை வரும் 27 ஆம் தேதி பிரதமர் திறந்து வைக்கிறார்.


Advertisement

மணி‌மண்டபம் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த மத்திய பாதுகாப்பு ஆராய்சி மைய மேம்பாடு நிறுவனத்தின் இயக்குநர் கிரிஷ்டோபர் இந்த தகவலை கூறினார். கலாம் பயன்படுத்திய புத்தகங்களை கொண்ட நூலகம் அமைப்பது, அறிவுசார் மையம், கோளரங்கம் என பல வசதிகளை இங்கு ஏற்படுத்தும் திட்டம் உள்ளதாகவும் கிரிஷ்டோபர் கூறினார்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் உடல் பேக்கரும்பு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மத்திய அரசின் சார்பில் சுமார் 15 கோடி மதிப்பில் மணிமண்டபம் கட்டப்பட்டு அதன் பணி நிறைவுபெறும் தருவாயில் உள்ளது. தற்போது அமைக்கப்பட்டு வரும் மணிமண்டபத்தை வரும் 27 ஆம் தேதியான கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் அன்று திறக்கப்பட உள்ளனர். இந்நிலையில் மணிமண்டபம் அமைக்கும் பணியினை மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மைய மேம்பாடு நிறுவனத்தின் இயக்குநர் கிரிஷ்டோபர் ஆய்வு செய்தார்.


Advertisement

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மறைந்த கலாம் அவர்கள் தனது சிறந்த கண்டு பிடிப்புகளின் மூலம் மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்திற்கு பெரும் உதவிகளை வழங்கியிருக்கிறார். அவரை பெருமைப்படுத்தும் வகையில் அவரது நினைவிடத்தை மிக சிறப்பாக அமைத்து வருகிறோம். கலாம் அவர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் அவரது நினைவிடத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. முதல் கட்டமாக கலாம் பயன்படுத்திய புத்தகங்களை கொண்ட நூலகம் அமைக்கப்பட உள்ளது. தொடர்ந்து அறிவுசார் மையம், கோளரங்கம் என பல வசதிகளை இங்கு ஏற்படுத்தும் திட்டம் உள்ளது. அதற்கு தேவையான கூடுதல் நிலத்தினை தமிழக அரசிடம் கேட்டுள்ளோம். அவை கிடைத்தவுடன் அடுத்த கட்ட பணிகள் துவக்கப்படும்.

கலாம் நினைவிடப் பணிகள் குறைந்த நாட்களில் மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. கலாம் நினைவிடத்தை உலகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் காண வருவார்கள். அவர்கள் கலாமின் பெருமைகளை எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்ட இதனை திறந்து வைக்க பிரதமரை அழைத்துள்ளோம். எங்கள் அழைப்பை ஏற்று பிரதமர் இந்நிகழ்வில் பங்கேற்பார் என நினைக்கிறோம்” என்றார்.

இதன் பின் ராமநாதபுரம் ஆட்சியர் நடராஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா, பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவன கட்டுமான பிரிவு பொறியாளர் பி.கே.சிங் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close