[X] Close

பட்ஜெட் 2021: கொரோனாவுக்கு எதிராக தொடரும் போரில் மேலும் 2 தடுப்பூசிகள்!

இந்தியா,கொரோனா வைரஸ்,மத்திய பட்ஜெட் 2021

2-more-vaccines-for-corona-Nirmala-Sitharaman

கொரோனாவுக்கு எதிரான மேலும் 2 தடுப்பூசிகள் விரைவில் நடைமுறைக்கு வரும் என  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.


Advertisement

2021-22 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வாசித்து வருகிறார். அதில், “2021 ஆம் ஆண்டிலும் கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும். கொரோனாவுக்கு எதிரான மேலும் 2 தடுப்பூசிகள் விரைவில் நடைமுறைக்கு வரும்.

image


Advertisement

சுகாதார துறைக்கான நிதி ஒதுக்கீடு இந்த பட்ஜெட்டில் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. தற்சார்பு, குணப்படுத்துதல், சரியான சிகிச்சை அளித்தல் ஆகிய விஷயங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிக்கு மத்திய பட்ஜெட்டில் ரூபாய் 35,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.” என்றார். 

> மத்திய பட்ஜெட் 2021 முக்கிய அம்சங்கள்

> மத்திய பட்ஜெட் 2021 சிறப்பம்சங்கள் 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close