[X] Close

முதல் 20,000 பேருக்கு மட்டுமே டிக்கெட் - திருப்பதியில் புதிய நடைமுறை அமல்

tirupathi-temple-s-new--procedure-has-come-into-force-today

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாதையாத்திரை வரும் பக்தர்களில் முதல் 20ஆயிரம் பேருக்கு மட்டுமே டிக்கெட் வழங்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.


Advertisement

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு மலைவழியில் பாத யாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு திவ்ய தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. சாதாரண நாட்களில் 30ஆயிரம் பேரும், விடுமுறை நாட்களில் 45ஆயிரம் பேரும் தரிசனத்திற்காக நடந்து செல்கின்றனர். கூட்ட நெரிசலால், தரிசனத்திற்கு 10 மணி நேரம் வரை அவர்கள் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதை தவிர்க்க பாதையாத்திரை வரும் பக்தர்களில் முதல் 20ஆயிரம் பேருக்கு மட்டுமே டிக்கெட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி திங்கள், செவ்வாய், புதன், வியாழக்கிழமை ஆகிய நாட்களில் பாதையாத்திரை வரும் பக்தர்களில் அலிபிரியில் 15 ஆயிரம் டிக்கெட்டுகளும், ஸ்ரீவாரிமெட்டில் 5 ஆயிரம் டிக்கெட்டுகளும் வழங்கப்படும் என்றும் அதன்பின் வருபவர்கள் பொதுதரிசனத்தில் செல்ல அனுமதிக்கபடுவர் என்றும் திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.


Advertisement

Advertisement
[X] Close