ஜெயலலிதா நினைவிடத்தில் அவர் அடிக்கடி பயன்படுத்தும் ’மக்களால் நான்; மக்களுக்காக நான்’(BY THE PEOPLE, FOR THE PEOPLE)என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னை மெரினாவில் எம்ஜிஆர் நினைவிடத்துக்கு அருகே அமைக்கப்பட்டுள்ளது. 15 மீ உயரம், 30.5 மீ நீளம், 43 மீ அகலத்தில் இந்த நினைவிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கருங்கல் நடைபாதை, கிரானைட் கற்களால் ஆன தரைப்பகுதி, புல்வெளி, நீர்த்தடாகங்கள் போன்றவை நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
2018 ஆம் ஆண்டு மே 7 ஆம் தேதி அடிக்கல் நாட்டி சுமார் 3 ஆண்டுகள் நடந்து வந்த பணிகள் முடிந்ததால் நினைவிடம் திறக்கப்படுகிறது. 80 கோடி ரூபாய் செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் கட்டப்பட்டிருக்கும் இந்த நினைவிடத்தை காலை 11 மணி அளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், வாரியத் தலைவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதற்காக ஏராளமான அதிமுக தொண்டர்கள் மெரினா கடற்கரையில் குவிந்துள்ளனர். அவர்கள் வாகனம் நிறுத்த தீவுத்திடல்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மக்கள் சாலையில் அமர்ந்து நிகழ்ச்சியை காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நினைவிட வளாகத்தில் பணிகள் நடந்துவருவதால் அறிவுத்திறன் பூங்கா, அருங்காட்சியகம் பின்னர் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா நினைவிடத்தின் முகப்பில் அவர் அடிக்கடி பயன்படுத்தும் ’மக்களால் நான்; மக்களுக்காக நான்’(BY THE PEOPLE, FOR THE PEOPLE)என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. தேர்தல் பிரசாரங்களிலும், மேடைப்பேச்சுகளிலும் இந்த வாசகத்தைக் கூறியே தொண்டர்களை உற்சாகப்படுத்துவார் ஜெயலலிதா.
Loading More post
கியான்வாபி மசூதியில் சிவலிங்கமா? உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை
ட்விட்டரில் திடீரென டிரெண்டான விஜய்யின் 'பீஸ்ட்' கிளைமேக்ஸ் காட்சி - என்ன காரணம்?
ஐபிஎல் 'பிளே-ஆஃப்' ரேஸில் முந்தியது டெல்லி: பஞ்சாப் பரிதாப தோல்வி
சர்வதேச பத்திரிகை புகைப்படக் கலைஞர் விருது பெற்ற மதுரைக்காரர்: யார் அவர்? என்ன சாதனை?
நெல்லை கல்குவாரி விபத்து: பெரும் போராட்டத்துக்குப் பின் 4-வது நபர் சடலமாக மீட்பு
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?