[X] Close

காஞ்சிபுரம்: ரயில் நிலைய கொடிக்கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றாத ரயில்வே நிர்வாகம்!

தமிழ்நாடு

Kanchipuram-Railway-administration-did-not-hoist-the-national-flag-on-the-railway-station-flagpole

காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் 100அடி உயர கொடிக் கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றுவதில் குளறுபடி ஏற்பட்டது.

நாடு முழுவதும் முக்கிய ரயில் நிலையங்களில் 100அடி உயரத்தில் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு தேசிய கொடி பறக்கவிடப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் பாரம்பரிய நகரமான காஞ்சிபுரம் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் 100அடி உயரம் கொண்ட கம்பம் அமைக்கப்பட்டது. இன்று 72வது குடியரசுதினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது இந்நிலையில் காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள 100அடி உயரம் கொண்ட கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது


Advertisement

image


காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் பல மாதங்களுக்கு முன்பே 100அடி உயரம் கொண்ட தேசியக்கொடி கம்பம் அமைக்கப்பட்டது. இந்த கம்பத்தை அமைத்த ஒப்பந்ததாரர் ரயில்வே துறையின் எந்த ஒரு அனுமதியும் பெறாமல் தன்னிச்சையாக நூறடி கம்பத்தில் சுயமாக தேசியக் கொடியை ஏற்றியதாக கூறப்படுகிறது. ரயில்வே துறையின் எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் எவ்வாறு ஒப்பந்ததாரர் தன்னிச்சையாக கொடி ஏற்றினார் என்று சர்ச்சை எழுந்திருக்கிறது.

இது தொடர்பாக ஒப்பந்ததாரர் மீது காஞ்சிபுரம் அரக்கோணம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து ரயில்வே நிர்வாகம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து ஒப்பந்ததாரர் உடனடியாக தாமாக முன்வந்து தான் ஏற்றிய தேசியக்கொடியை இறக்கி உள்ளார்.இந்நிலையில் இன்று குடியரசுதின நாளான இன்று கூட 100 அடி உயரம் கொண்ட கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றாமல் ரயில்வே நிர்வாகம் மெத்தனம் காட்டி உள்ளது.


Advertisement


இந்நிலையில் நாளை ரயில்வே துறையை சார்ந்த உயரதிகாரிகள் காஞ்சிபுரத்திற்கு வருகை தர இருக்கிறார்கள் அப்போது 100 அடி உயரம் கொண்ட புதிதாக அமைக்கப்பட்ட இந்த கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றப்படும் என தற்போது காஞ்சிபுரம் ரயில்வே நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. 


கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே ரயில் நிலையங்களில் தேசியக் கொடியை பொருத்தமான இடத்தில் நிறுவ வேண்டும், விளக்குகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். தேசியக் கொடியின் பாதுகாப்பினை உறுதி செய்வது ரயில்வே பாதுகாப்பு படையினரின் பணி என்று ரயில்வே நிர்வாகம் குறிப்பிட்டு இருந்தது. இருப்பினும் காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் தேசியக்கொடிக்கு உரிய மரியாதை கொடுக்காமல் மிகவும் அலட்சியமாக ரயில்வே நிர்வாகம் நடந்து கொண்டது விதிமீறல் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்


Advertisement

Advertisement
[X] Close