தமிழகத்தின் முக்கிய நகரங்களில் 'சிதம்பர ரகசியம் பார்ட் 2' நாளை வெளியிடப்படும் எனவும், இடம் நேரம் குறித்தும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் சிதம்பரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 48-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு மருத்துவக் கல்லூரியில் அரசு கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க வலியுறுத்தி நாள்தோறும் பல்வேறு நூதன போராட்டங்களை மாணவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் சென்னை, திருச்சி, கோவை, உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய தலைநகரங்களில் ஒட்டப்பட்ட சிதம்பர ரகசியம் பார்ட் 2 என்ற சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குடியரசு தினமான நாளை சிதம்பர ரகசியம் பார்ட் 2 வெளியிடப்போவதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு இடமாக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி வளாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களிடம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் நடத்திய மூன்று கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் நேற்று இரவு முதல் ஒட்டபட்டுள்ள போஸ்ட்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்துள்ள ஊழல், முறைகேடு பட்டியல் வெளிவரலாம் என தகவல் பரவி வருவதால் பல்கலைக்கழக வளாகம் மட்டுமின்றி சிதம்பரம் நகரே பரபரப்பில் உள்ளது.
Loading More post
எளியோரின் வலிமைக் கதைகள் 35- ‘இது சாப்பாடு போடும் சாமானியர்களின் கதை’
சரவணா ஸ்டோர்ஸின் ரூ.235 கோடி சொத்துகள் முடக்கம்
'மின் இணைப்பை துண்டித்து விடுவோம்' - புதுவித சைபர் மோசடி.. போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
ஆரணி: சிக்கன் பிரியாணியில் கிடந்த கரப்பான் பூச்சி; அதிர்ச்சியடைந்த தம்பதியர்
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்