Published : 21,Jan 2021 06:19 PM
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதுபோல கர்நாடக மருத்துவர்கள் நடித்தார்களா? - உண்மை இதுதான்

இந்தியா முழுவதும் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த சனிக்கிழமை அன்று ஆரம்பமானது. தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டு வருகின்றன. ஒரு சில இடங்களில் தடுப்பூசியின் செயல்பாட்டில் அச்சம் கொண்டதால் முன்கள பணியாளர்கள் அதை செலுத்திக் கொள்வதில் தயக்கம் காட்டுகின்றனர்.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் துக்கூர் பகுதியில் மருத்துவர்கள் இருவர் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்வது போல போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
“இது தான் நீங்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் லட்சணமா. யாரை ஏமாற்ற பார்க்கிறீர்கள்?” என்ற தொனியில் அந்த வீடியோவை மக்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த வீடியோ குறித்து விளக்கம் கொடுத்துள்ளார் தும்கூர் துணை கமிஷனர் டாக்டர் ராகேஷ் குமார்.
“அந்த வீடியோவில் இருப்பது தும்கூர் அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் ரஜனி மற்றும் தும்கூர் மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் நாகேந்திரப்பாவும் தான். இருவரும் பத்திரிகையாளர்களின் கோரிக்கைக்கு ஏற்ப தடுப்பூசி போட்டுக் கொள்வதை போல போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளனர். அதை தான் யாரோ வீடியோவாக எடுத்து தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனர். இதில் மருத்துவர் ரஜனி கடந்த 16 ஆம் தேதியன்றே கோவாக்சின் மருந்தை செலுத்திக் கொண்டார்” என தெரிவித்துள்ளார் ராகேஷ் குமார்.
“நாங்கள் இதில் எந்த தவறும் செய்யவில்லை. எங்கள் மீது வீடியோ ஆதாரத்துடன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டும் உண்மை அல்ல. பணி விலகுமாறு சிலர் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதையடுத்து தான் இது என் கவனத்திற்கு வந்தது” என்கிறார் நாகேந்திரப்பா.
Photos of Tumakuru med officers taking vaccine goes viral with misleading caption
மருத்துவர்கள் இருவரும் பத்திரிகையாளர்களின் கோரிக்கையை ஏற்றே போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர் என்பதையும் உள்ளூர் நிரூபர் ஒருவர் உறுதி செய்துள்ளார்.
நன்றி : THE NEWS MINUTE