Published : 19,Jan 2021 07:55 PM
ஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி! 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு

வரும் 27 சசிகலா விடுதலை ஆவது உறுதி என்றும் அதற்கான அதிகாரப்பூர்வ கடிதம் கிடைத்திருப்பதாக, அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தகவல் தெர்வித்துள்ளார்.
பெங்களூர் பரப்பன அஹ்ரகாரா சிறையில் இருந்து சசிகலா 27 ஆம் தேதி விடுதலை ஆகிறார். சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு சிறக்குச் சென்ற சசிகலா நான்கு ஆண்டுகள் கழித்து விடுதலை ஆகிறார்.
சசிகலா சிறையில் இருந்து வெளிவரும் நிலையில், வரும் 22 ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பு உண்டாகி இருக்கிறது.