சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் கைவரிசை காட்டிய பிரபல பைக் திருடனை காரைக்காலில் வைத்து போலீசார் கைதுசெய்து சிறையிலடைத்தனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் குற்றவாளிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த காரைக்கால் காவல்துறை பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் காரைக்கால் நகர காவல்நிலைய போலீசார் விக்ரம்சாரபாய் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக நம்பர் பிளேட் இல்லாமல் விலையுயர்ந்த மோட்டார் சைக்கிளில் வந்த நபரை நிறுத்தி விசாரித்தனர். அவர் நாகை மாவட்டத்தை சேர்ந்த கலைகுமார் என்பதும், அவர் ஓட்டி வந்தது திருட்டு பைக் என்பதும் தெரியவந்தது. மேலும் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான இருசக்கர வாகனங்களை திருடி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து சுமார் ரூ. 7 லட்சம் மதிப்புடைய 14 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்த பிரபல மோட்டார் சைக்கிள் திருடன் கைது செய்யப்பட்ட தகவலை சென்னை உள்ளிட்ட தமிழக பிறமாவட்ட காவல் துறைக்கு புதுச்சேரி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!