கும்கி-2 படத்தில் தனது ஆஸ்தான இசையமைப்பாளர் டி.இமானை பிரிய இருக்கிறார் பிரபு சாலமன்.
தொடரி படத்தை அடுத்து கும்கி-2 படத்தை இயக்க இருக்கிறார் பிரபு சாலமன். இந்தப் படத்தில் கும்கி படத்தில் நடித்த யாருக்கும் அவர் வாய்ப்புத் தரவில்லை. முற்றிலும் புதுமுகங்களை கொண்டு படத்தை இயக்க அவர் தயாராகி விட்டார். இருப்பினும், இந்தப்படத்திற்கு அவரது ஆஸ்தான இசையமைப்பாளர் டி.இமான் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கும்கிக்கு முன்பும், அதனைத் தொடர்ந்தும் இவர் இயக்கிய படங்களுக்கு இசையமைத்து வந்த இமானை பிரிந்திருக்கிறார் பிரபு சாலமன். காரணம் பட்ஜெட். தொடரி படம் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதால், குறைவான பட்ஜெட்டில் படம் இயக்குவதால்தான் கும்கி படத்தில் இடம் பெற்ற நடிகர்களையும், கலைஞர்களையும் தவிர்த்துள்ளார். அதே பட்ஜெட் காரணமாகத்தான் இமானையும் பிரபு சாலமன் தவித்துள்ளார். இந்தப்படத்திற்கு தெகிடி, சேதுபதி, கூட்டத்தில் ஒருவன் ஆகிய படங்களுக்கு இசையமைத்திருந்த நிவாஸ் கே.பிரசன்னா இசைமயக்க இருக்கிறார்.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!