[X] Close

கோவாக்சின் தடுப்பூசிக்கு முன்கூட்டியே அனுமதி அளித்தது ஆபத்து: சசிதரூர் கவலை

இந்தியா,கொரோனா வைரஸ்

central-government-approve-covaxin-vaccine--Tharoor-calls-its-approval-dangerous

"கோவாக்சினுக்கு இன்னும் 3-ஆம் கட்ட பரிசோதனை செய்யப்படவில்லை, அதற்கு முன்பே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது ஆபத்தானது" என்று திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி  சசிதரூர்  கவலை தெரிவித்தார்.image

பாரத் பயோடெக்கின்  கோவிட்-19 தடுப்பூசி மற்றும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி கோவிஷீல்ட் ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கு இந்தியாவின் மருந்துகள் கட்டுப்பாட்டாளர் ஒப்புதல் அளித்ததால், மத்திய அரசு ஒப்புதல் அளித்தவுடன் அதை விநியோகிக்க அரசு தயாராக இருப்பதாக கேரள அரசு கூறியிருந்தது. இதற்கிடையில் சசி தரூர் தனது ட்வீட்டில் "கோவாக்சினுக்கு இன்னும் 3 ஆம் கட்ட சோதனை செய்யப்படவில்லை, அதற்கு முன்பே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது, இது ஆபத்தானது" என தெரிவித்துள்ளார்.


Advertisement

கேரள மாநில சுகாதார அமைச்சர் கே.கே. ஷைலாஜா, மத்திய அரசு ஒப்புதல் அளித்தவுடன் தடுப்பூசி விநியோகிக்க  மாநில அரசு தயாராக உள்ளது என்றார். "மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி நாங்கள் தடுப்பூசியைப் பயன்படுத்துவோம். தடுப்பூசி விநியோகத்துக்கு தேவையான குளிர்சாதன பெட்டி (ஐ.எல்.ஆர்), குளிர் பெட்டி போன்றவை தயாராக உள்ளன. மேலும் மாநிலம் முழுவதும் தடுப்பூசி விநியோகிக்கும் இடங்களையும் இறுதி செய்துள்ளோம்"என்று அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

கோவாக்சின் பற்றிய தரூரின் விமர்சனம் குறித்து அவரிடம்  கேட்டபோது, தடுப்பூசிகள் குறித்து மாநில அரசு இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பைப் பெறவில்லை என்றும், பின்னர் அது குறித்து கருத்து தெரிவிப்பதாகவும் கூறினார்.


Advertisement

Advertisement
[X] Close