Published : 31,Dec 2020 05:55 PM
ஐசிசி டெஸ்ட் தவரிசை : கோலி, ஸ்மித்தை முந்திய கேன் வில்லியம்சன்!

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான பேட்டிங் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்தியாவின் கோலி மற்றும் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார் வில்லியம்சன்.
How it started v how it's going ? pic.twitter.com/XKyEJUgUAS
— ICC (@ICC) December 31, 2020
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியதன் மூலம் 890 புள்ளிகள் பெற்று உலகின் முதல் நிலை பேட்ஸ்மேனாக புரோமோட் ஆகியுள்ளார் வில்லியம்சன். அதே நேரத்தில் ஸ்மித் இந்தியாவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் 4 இன்னிங்ஸ் விளையாடி மொத்தம் 10 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். கேப்டன் கோலியும் இந்தியா திரும்பி விட்டதால் வில்லியம்சன் புள்ளிகளில் முன்னேறி முதலிடம் பிடித்துள்ளார்.
The No.1 and No.2 Test batsmen in one frame ? pic.twitter.com/rfzygYZFYl
— ICC (@ICC) December 31, 2020
அண்மையில் வெளியான கடந்த பத்து ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் ஒருநாள் வீரருக்கான விருதை கோலியும், சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதை ஸ்மித்தும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.