[X] Close

சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும்: சுப்ரமணியன் சுவாமி கருத்து

Change-sasikala-into-TN-Jail-says-Subramanian-Sway

சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார். 

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவர், குற்றம் செய்ததற்காக சிறையில் சசிகலா அடைக்கப்பட்டிருப்பதே போதுமான தண்டனை என்றும் அவரை மேலும் துன்புறுத்தத் தேவையில்லை என்றும் தெரிவித்தார். சிறையில் அவர் என்ன விஐபி வசதிகளைப் பெற்று விடப் போகிறார்? தனக்குத் தானே சமைத்துக் கொள்ள தனி சமையலறையை பெற்றுள்ளாரா? என்றும் சுப்ரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார். ஏற்கனவே தண்டனையை அனுபவித்து வரும் சசிகலா, ஆதாரங்களைக் கலைக்க வாய்ப்பு இல்லை என்பதால், மொழி தெரியாத பெங்களூரு சிறையில் இருந்து தமிழக சிறைக்கு மாற்றப்பட வேண்டும் என்றும் சுவாமி தெரிவித்துள்ளார்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close