Published : 12,Jul 2017 04:48 PM

குடிநீர் கேன்கள் விலை அதிகரிப்பு: நடுத்தர மக்கள் திண்டாட்டம்

Mineral-water-Bottle-Price-increased

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் குடிநீர் கேன்கள் பயன்பாடு தவிர்க்க முடியாததாக இருக்கிறது. இந்த நிலையில், குடிநீர் கேன்களின் விலை அதிகரிக்கப்பட்டிருப்பதால் சாதாரண நடுத்தர குடும்பங்களின்‌ செலவு கூடியுள்ளது.

சென்னை பெருநகரில் மட்டும் குடிநீர் கேன்களின் ஒருநாள் தேவை 900 மில்லியன் லிட்டராக இருக்கிறது. கோடையின் தாக்கம் குடிநீர் தேவையை அதிகரித்துள்ளதோடு, வாட்டன் கேன் தயாரிப்பு மையங்களிலும் தட்டுப்பாட்டை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 900 மில்லியன் லிட்டர் விநியோகிக்கப்பட்ட இடத்தில் தற்போது 480 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், குடிநீர் கேன்களை நம்பியுள்ள மக்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக குடிநீர் கேனின் விலை 5 ரூபாய் முதல் 8 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி-யில் குடிநீர் கேன்களுக்கு 18 சதவிகிதம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் கேன் நிறுவனங்கள் ஒரு கேனுக்கு 7 ரூபாயில் இருந்து 11 ரூபாய் வரை விலையை உயர்த்தியுள்ளன. அதனால் தான் தண்ணீர் கேன்களை  5 முதல் 8 ரூபாய் வரை விலையை அதிகரித்து விற்க வேண்டிய நிலையில் இருப்பதாக தண்ணீர் கேன் விற்பனையாளர்கள் கூறுகின்றனர். தேவை கருதி வாடிக்கையாளர்களும் விலை உயர்வை ஏற்றுக்கொண்டுவிட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்