கார்த்திக் நரேன் இயக்கதில் தனுஷ் நடிக்கவிருக்கும் ‘தனுஷ் 43’ படத்தின் மூன்று பாடல்களை முடித்துவிட்டதாக, அப்படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் துவக்கத்தில் நடிகர் தனுஷின் ‘பட்டாஸ்’ திரைப்படம் வெளியானது. இதில், அவர் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அதனையடுத்து தனுஷ் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜின் ‘ஜகமே தந்திரம்’, மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’, ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ‘அட்ராங்கி ரே’ படத்தில் நடித்து வருபவர் அடுத்ததாக கார்த்திக் நரேன், ஜவகர் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்தப் படங்களில் முடித்தப்பிறகுதான் ராம்க்குமாரின் 'வால் நட்சத்திரம்' படத்தில் நடிக்கவிருக்கிறார்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான ‘மாஃபியா’வில் அருண் விஜய், ப்ரியா பவானி சங்கர், பிரசன்னா நடிக்க லைகா புரடெக்ஷன் தயாரித்தது. ஆனால், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதே கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான் நடிப்பில் 2016இல் வெளியான ’துருவங்கள் 16’ விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. தனுஷின் 43 படம், கார்த்திக் நரேனுடன் என்று அறிவிப்பு வெளியானபோது எதிர்பார்ப்பு கிளம்பியது.
தனுஷ் 'அட்ராங்கி ரே' படப்பிடிப்புக்காக நொய்டாவில் இருந்துவரும் நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் " 'தனுஷ் 43' படத்தின் மூன்று பாடல்களை முடித்துவிட்டு, நான்காவது பாடலை துவங்கவிருக்கிறேன். பாடல்கள் உற்சாகமாக இருக்கின்றன. தயாராக இருங்கள் தனுஷ் என்று” உற்சாகமுடன் அறிவித்திருக்கிறார். இதனை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனமும் ரீட்விட் செய்துள்ளது. ஏற்கெனவே, தனுஷ்-ஜி.வி பிரகாஷ் கூட்டணீயில் உருவான 'பொல்லாதவன்', 'அசுரன்' படங்களின் பாடல்கள் வைரல் ஹிட் எனபது குறிப்பிடத்தக்கது.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!