[X] Close

எளிய முறையில் நடந்த 'சிலம்பாட்டம்’ பட நடிகர் சனா கான் திருமணம்!

சினிமா

silambattam-actor-sana-khan-married

’சிலம்பாட்டம்’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த நடிகர் சனா கான் திருமணம் குஜராத்தில் நடைபெற்றது. அவருக்கு திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

கேரள மாநிலம் கன்னூரைச் சேர்ந்த சனாகான் பிறந்து வளர்ந்தது எல்லாமே மும்பையில்தான். மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு விளம்பரங்களில் தோன்றினார். அதோடு, நடனக் கலைஞராகவும் திறமையை வெளிப்படுத்தினார். கடந்த 2005 ஆம் ஆண்டு பாலிவுட் படமான ’யே ஹி ஹை ஹை சொசைட்டி ’படத்தின் மூலம் அறிமுகனானவரை, 2008 ஆம் ஆண்டு வெளியான சிலம்பாட்டம் படம் மூலம் தமிழில் அறிமுகப்படுத்தினார் நடிகர் சிம்பு. இப்படத்தில் ’நலம்தானா நலம்தானா’... ’வச்சிக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள’பாடலில் சிம்புவுக்கு நடனத்தில் டஃப் ஃபைட் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 image


Advertisement

சிலம்பாட்டம் படத்திற்குப்பிறகு தம்பிக்கு இந்த ஊரு, ஆயிரம் விளக்கு உள்ளிட்ட படங்களில் நடித்த சனா கான் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இந்தியில் பிக்பாஸ் சீசன் 6 ல் கலந்துகொண்டு ரன்னராகவும் வந்தார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு நடன இயக்குநர் மெல்வின் லூயிஸ் என்பவரை காதலித்தவர், பின்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததோடு ஒருவரைக்கொருவர் குற்றம் சுமத்திக்கொண்டனர். 

image


Advertisement

இந்நிலையில், சனா கானுக்கும் குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்த இஸ்லாமிய மதகுரு முஃப்தி அனாஸ் என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. வெள்ளை நிற உடையில் சனா கான் திருமணம் செய்து கேக் வெட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. இத்திருமணத்தில், சனாகானின் உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளார்கள்.

image

கடந்த 20 ஆம் தேதி திருமணம் ஆனதையொட்டி சனா கான் சிவப்பு நிற உடையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளதோடு தனது பெயரை சையத் சனா கான் என்றும் மாற்றியுள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close