பகலில் கட்டடத் தொழிலாளிபோல் நோட்டமிட்டு இரவில் தொடர்ச்சியாக கொள்ளை அடிக்கும் கும்பலை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் 39 சவரன் தங்க நகைகள், மற்றும் ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த சிறுப்பாக்கம் சோதனைச்சாவடியில் வேப்பூர் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் டெல்டா சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த பேருந்தை சோதனை செய்ய முயன்றபோது பேருந்தில் இருந்த 4பேர் மூட்டைகளுடன் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த மோட்டூர் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை (45), ரஞ்சித் (28), மூர்த்தி (24), பெங்களூரை சேர்ந்த சத்யா (19) என்பது தெரியவந்தது. இவர்கள் வைத்திருந்த மூட்டைகளில் கத்தி, கடப்பாரை, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்து தெரியவந்தது.
இதையடுத்து சந்தேகமடைந்த போலீசார் மேற்கொண்ட தொடர் விசாரணையில் அவர்கள் வேப்பூர் , சிறுபாக்கம் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டதும், சிறுப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 13 திருட்டு வழக்குகளில் இவர்கள் குற்றவாளிகளாக தேடப்பட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இவர்கள் 4 பேர் அளித்த தகவலின் அடிப்படையில் தாங்கள் திருடிய நகைகளை தங்களது உறவினர்களான மோட்டூர் பகுதியை சேர்ந்த லட்சுமி (40), மாரி (26), சரிதா (33) ஆகியோரிடம் கொடுத்து விற்று வந்ததும் தெரியவந்தது. போலீசார் இவர்களிடம் இருந்து 39 சவரன் நகை, 1 1/2 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
வேப்பூர் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இச்சம்பவம் குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளை வழக்கில் தொடர்புடைய 4பேரையும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த 4பேரையும் கைது செய்துள்ளனர்.
Loading More post
'ஒட்டுமொத்த நாட்டையே தீக்கிரையாக்கிய நுபூர் ஷர்மா' - உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
`சுதந்திர தினம், குடியரசு தினம் போலத்தான் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட நாளும்!’-ஆளுநர் கருத்து
”என் உடல் பலமாக இல்லைதான்; ஆனால் என் இதயம்..” - மனம் திறந்த நடிகை ஸ்ருதி ஹாசன்!
பினாமி பெயரில் இருந்த சசிகலாவின் சொத்துகள் - முடக்கிய வருமான வரித்துறை
`98.55% என்றானது கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம்!’- மத்திய அரசு தகவல்
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide