விஐபி 3-யிலும் கஜோல் நிச்சயம் இடம்பெறுவார் என நடிகர் தனுஷ் உறுதி கூறியுள்ளார்.
தனுஷ், அமலா பால், கஜோல் உள்ளிட்டோரை வைத்து சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் படம் வேலையில்லா பட்டதாரி 2. ஹீரோ தனுஷுடன் சரிக்குசரி போட்டிபோடும் கதாபாத்திரத்தில் இதில் நடிக்கிறார் நடிகை கஜோல்.
இந்நிலையில் விஐபி 2-வின் பிரஸ் மீட் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நடிகை கஜோல், " சென்னைக்கு மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. தென்னிந்திய சினிமா கடந்த சில வருடங்களில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. உதாரணத்திற்கு பாகுபலியையே வைத்துக்கொள்ளலாம். வசூலிலும், மக்கள் மனதிலும் பெரும் சாதனையை படைத்துள்ளது" என்றார்.
தொடர்ந்து தனுஷ் பேசும்போது கஜோலின் நடிப்பை வெகுவாக பாராட்டினார். மேலும் பேசிய தனுஷ் "விஐபி 3-யிலும் முக்கிய ரோலில் கஜோல் நடிப்பார் எனக் குறிப்பிட்டார். திரையில் கஜோல் வரும் காட்சிகள் ரசிகர்களை பெரிதும் ஈர்க்கும்" என்றர். விஐபி 2-வை ஜூலை 28-ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி