[X] Close

லேட்டா வந்தாலும்... ஷமிக்கு கோலி பாராட்டு

Kohli-praises-Shami-s-performance

’இரண்டு வருடத்துக்குப் பிறகு ஒரு நாள் போட்டிக்குத் திரும்பியுள்ள பந்துவீச்சாளர் முகமது ஷமி, சிறப்பாக செயல்பட்டார்’ என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலி பாராட்டினார்.


Advertisement

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி நேற்று வெற்றிப்பெற்றது. இதில் தொடர் நாயகன் விருது ரஹானேவுக்கு வழங்கப்பட்டது. பின்னர் பேசிய கங்குலி, ரஹானே, முகமது ஷமி, தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட வீரர்களைப் புகழ்ந்தார். 

அவர் கூறும்போது, ’அணியின் முழு ஒத்துழைப்புடன் தொடரை வெல்ல வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கமாக இருந்தது. அது நடந்துவிட்டது. குறிப்பாக ரஹானே சிறப்பாக ஆடினார்.  ஓபனிங்கில் தவானும் நன்றாகச் செயல்பட்டார். எப்போதும் சேஸிங்கில் வெல்வது பிடித்திருக்கிறது. இந்தப் போட்டியில் தினேஷ் கார்த்திக் நன்றாக ஒத்துழைப்புக் கொடுத்தார். தங்களுக்கான வாய்ப்புகளை வீரர்கள் சரியாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இரண்டு வருடத்துக்குப் பிறகு ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு திரும்பியிருந்தாலும் முகமது ஷமி நன்றாக பந்துவீசினார்’ என்றார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close