[X] Close

தோனியை விமர்சித்த பாக். வீரரை வறுத்தெடுத்த ட்விட்டர் வாசிகள்

Pakistan-player-criticizes-Dhoni

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், போட்டியில் எவ்வளவு மோசமான நிலையையும் சமாளித்து வெற்றிக்கு அழைத்துச் செல்லும் திறமை கொண்டவருமான தோனியை பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரான ரமீஸ் ராஜா விமர்சித்ததற்காக தோனியின் ரசிகர்கள் அவரை ட்விட்டரில் வறுத்தெடுத்துள்ளனர்.

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரமீஸ் ராஜா, டெஸ்ட் கிரிக்கெட் தொடர்பாக ஆசிய நாடுகளில் உள்ள கிரிக்கெட் வாரியத்தை விமர்சிக்கும் போது தோனி மற்றும் ஷாகித் அஃப்ரிடி ஆகிய இருவரையும் உதாரணம் காட்டி விமர்சித்தார்.

அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய அணியில் தோனி மற்றும் பாகிஸ்தான் அணியின் ஷாகித் அஃப்ரிடி ஆகியோர் இன்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ‘ஏ கிரேட்’ ஒப்பந்தத்தில் உள்ளனர். இதுபோன்றவற்றை ஆசிய நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். அவர் சிறந்த வீரராக இருந்த போதிலும் இதுபோன்ற விதிவிலக்குகள் அளிக்கக்கூடாது என்று கூறியிருந்தார்.


Advertisement

ரமீஸ் ராஜா கூறியது இணையதளவாசிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதனால் ராமிஸ் ராஜாவை ட்விட்டர் சமூகவளைதளத்தில் கடுமையாக திட்டி வருகின்றனர். தோனியின் ரசிகர்கள் அவர் மீதான எந்தவொரு குற்றச்சாட்டையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை கடந்த காலங்களில் பார்த்திருக்கிறோம்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த தோனியின் ரசிகர் ஒருவர், “இது உங்களுக்கு தேவையில்லாத வேலை” என்று கூறியுள்ளார். மற்றொருவர், “தோனியைப் பற்றி கருத்து கூறுவதற்கு முன்பு ரமீஸ் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துப் பேச வேண்டும். பாகிஸ்தானின் கிரிக்கெட் ஆட்டங்களை கவனிப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்” என்று அவர் கூறினார்.


Advertisement

Advertisement
[X] Close