Published : 03,Jul 2017 01:55 PM

குரூப்-4 கலந்தாய்வு ஜூலை-17 தொடக்கம்

TNPSC-group-4-counselling-begins-on-July-17

குரூப் 4 பணியிடங்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வு 17ம் தேதி தொடங்குவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 

குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவையர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் ஆகிய பணிகளுக்கான 5,451 காலியிடங்களுக்கான தேர்வுகள், கடந்தாண்டு நவம்பர் 6-ம் தேதி நடந்தது. இந்த தேர்வை 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியிருந்தனர். இந்நிலையில் இந்த தேர்வு முடிவுகள் கடந்த பிப்ரவரி 21ம் தேதி வெளியானது. இதற்கான முதல்கட்ட கலந்தாய்வுகள் வரும் 17ம் தேதி தொடங்கும் என டிஎன்பிஎஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.  குரூப் 4  இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறும் எனவும், தட்டச்சர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 16 முதல் 30ம் தேதி வரை நடைபெறும் எனவும் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு செப்டம்பர் 4ம்தேதி முதல் 6ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என்றும், கலந்தாய்வில் பங்கேற்பவர்கள் பதிவெண் http://www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ் நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்